கேளிக்கை

`காஞ்சனா 3′ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

(UTV|INDIA)-ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.

அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

 

 

 

Related posts

3000 முறை காதலை சொன்ன சமந்தா? (PHOTOS)

உலகப் புகழ்பெற்ற கனேடிய பாடகருக்கு கொவிட்

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை