(UTV|GAZA)-காசா எல்லையில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும்.
இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு திரும்ப உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து, காசா எல்லை பகுதியில் பாலஸ்தீனர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதோடு பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]