உலகம்

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

 

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருந்தாலும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தெற்கு காசாவில் இன்று காலை 6 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இதையடுத்து ராஃபா எல்லைப் பகுதி திறக்கப்படும் என எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.போர் நிறுத்தம் பல மணி நேரம் நீடிக்கும். ஆனால் அது குறித்து தெளிவான நேரம் அறிவிக்கப்படவில்லை. மூன்று நாடுகளும் போரை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ராஃபா எல்லை இன்று பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ராஃபா, எகிப்தின் சினாய் தீபகற்பத்துக்கும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியாகும்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த ஒரே பாதை வழியாகத்தான் மக்கள் வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருள்களுடன் ஏராளமான வண்டிகளுடன் ராஃபா எல்லையில் காத்திருக்கின்றன என்று அல் – அரிஷில் உள்ள பாதுகாப்பு வட்டாரமும் அரசு சார்பற்ற அமைப்புகளும் தெரிவித்தன. எகிப்து, தமது தரப்பில் உள்ள எல்லை திறந்தே இருக்கும் என்று அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசிவருவதால் மக்கள் அவ்வழியாக வெளியேற முடியவில்லை. இந்த நிலையில் தெற்கு காசா வட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மக்கள் வெளியேற வழிவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நாடுகள், பல அமைப்புகள் நிவாரண உதவிப் பொருள்களை அனுப்பி வைத்தாலும் அது பொதுமக்களை சென்றடையவில்லை. இந்த நேரத்தில் காசாவில் உதவிப் பொருள்களை விநியோகிக்கவும் வெளிநாட்டவர்கள் வெளியேறவும் ஓர் உடன்பாடு காணப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா

உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO இனால் புதிய பெயர்கள்

மத்திய கிழக்கு நாடுகள் – அமெரிக்கா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்