காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று (22) மீண்டும் ஆரம்பமானது.
நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
83 பயணிகள் குறித்த கப்பலில் அங்கிருந்து வருகைதந்திருந்த நிலையில், பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டனத்திற்கு, பயணத்தை ஆரம்பித்த கப்பலில் 83 பேர் பயணித்திருந்தனர்.
இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.