உள்நாடு

கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாய் – பெண் ஒருவர் கைது

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியானதை தொடர்ந்து, பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள மாங்குளம் பொலிஸார், சந்தேகநபரான பெண்ணை கைது செய்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மத்தியஸ்தக் குழு எடுத்த மனிதாபிமானமற்ற முடிவே இந்த நாய் கொல்லப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனம் வௌியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மே 1,3 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை

இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!