உள்நாடு

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட 29 வயதுடைய பெண்

எலபாத பொலிஸ் பிரிவின் தெல்லபட பகுதியில் இன்று (29) காலை இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6.00 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, ​​நபரொருவர் வீட்டிற்கு பின்னால் இருந்து ரகசியமாக நுழைந்து அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கொலையாளியும் அதே இடத்தில் ஒரு போத்தல் விஷத்தைக் குடித்துவிட்டு, போத்தலை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இருப்பினும், தப்பி ஓடும்போது, ​​அவர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மயங்கி விழுந்துள்ள நிலையில், அதனை கண்ட கிராமவாசிகள் அவரை இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கொலை நடந்த நேரத்தில் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இளம் பெண்ணின் தாய் வீட்டில் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

கொலையாளி இரவில் இந்த வீட்டின் அருகே தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் தெல்லபடாவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண் ஆவதுடன், அவர் களனி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், தற்போது இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 32 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

அவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த பெண்ணும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் காதல் உறவில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor

தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை கோரினார் பிரதமர் ஹரிணி

editor

உங்கள் ஆணவத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போதாவது நாங்கள் சொல்லும் சாதகமான தீர்வுகளுக்கு செவிசாயுங்கள் – சஜித் பிரேமதாச

editor