உள்நாடு

கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய மேலும் 82 கொள்கலன்களை இன்று மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

அவற்றுள் 21 கொள்கலன்கள் இங்கிலாந்துக்கு முன்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந் நிலையில் மீதமுள்ள கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அந்தமான் கடலுக்கு அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம்

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!