வகைப்படுத்தப்படாத

கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – மீள் சுழற்சிக்கான திண்ம கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவல்களினால் 18.07.2017 முன்னெடுக்கப்பட்டது

சிறுவர்களிடத்திலும்  சிறுவர்களினூடாக பெரியோரிடத்திலும் முறையாக கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசா லை மாணவர்களும் இணைந்து மேற்படி  வேலைத்திட்டத்தை  முன்னெடுத்தனர்

மாணவர்களினால் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்தல் தொடர்பில் பாதாதைகளும் பல்வேறு காட்சிகளும் ஏந்திய வண்ணம் ஹட்டன் நகரில் கிடந்த கழிவுகளை முறையாக அகற்றியதுடன் பேரணியாகவும் வருகைத்தந்தனர் நிகழ்வில் பாலர் பாடசலை மாணவர் மாணவிகள் பெற்றோர்கள் நகரசபை செயலாளர் எஸ் பிரியதர்சினி சுகாதார பரிசோதகர்  பாலகிருஸ்னர் மற்றும் ஹட்டன் பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

காதல் விவகாரத்தால் மோதல்

West Indies beat Afghanistan by 23 runs

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்