வகைப்படுத்தப்படாத

கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

(UTV|ANURADHAPURA)-பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சேவையில் இருந்து தப்பிச் சென்றுள்ள இராணுவ வீரர் ஒருவரே சந்தேகநபர் என்றும், தனது கள்ளக் காதலி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள பெண் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மஹிந்த கஹந்தகவுக்கு விளக்கமறியல்!

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி

ஜப்பான் புதிய மன்னருடன் அமெரிக்கா ஜனாதிபதி சந்திப்பு