வகைப்படுத்தப்படாத

கள்ளக்காதலால் பயங்கரம்: கணவனை கொன்று புதைத்த மனைவி!

(UDHAYAM, COLOMBO) – புதுச்சேரியில் தொழிலதிபரை கொலை செய்து நாடகமாடிய அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத். தொழிலதிபர். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த ஓரு வருடமாக புதுச்சேரியில் தங்கியிருந்து விழுப்புரம் பூத்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார் விவேக்.

இந்நிலையில், கடந்த 1-ம் திகதி விவேக் பிரசாத்தை காணவில்லை என்று அவரது மனைவி ஜெயந்தி, ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவற்துறையினர் விசாரித்தனர். அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் விவேக் பிரசாத்தின் உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விவேக்கின் உதவியாளர் பாபு தலைமறைவானார். அவரை காவற்துறையினர் கைது செய்து விசாரித்த போது திடுக் தகவல்கள் வெளியாயின.

பாபுவும் விவேக் பிரசாத்தின் மனைவியும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இது விவேக் பிரசாத்துக்கு தெரிய வந்ததும் கண்டித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் விவேக் பிரசாத்தை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி ஜெயந்தியும் பாபுவும் சேர்ந்து, அவரை கொன்று புதைத்துள்ளனர்.

காவற்துறையினர் இருவரையும் தற்போது கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

හේමසිරිව හදිසියේ රෝහල්ගත කරයි

முன்னாள் பிரதியமைச்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கடந்த 24 மணித்தியாலத்தில் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி