சூடான செய்திகள் 1

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 8 மணி வரை?

(UTV|COLOMBO) இன்று (25) களுத்துறை மாவட்ட அரச வைத்தியசாலைகளின் அனைத்து வைத்தியர்களும் ஆரம்பித்துள்ள அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் சூழலை கருத்திற்கொண்டு காலை 8 மணியின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் நிறைவேற்று குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதன்படி களுத்துறை மாவட்ட அரச வைத்தியசாலைகளின் அனைத்து வைத்தியர்களும் நேற்று நண்பகல் 12 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு