உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

 களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? இல்லையா?

(UTV |  களுத்துறை) –  களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? தொடர்ந்தும் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதேவேளை, பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளில், உயிரிழந்த பெண்ணின் தோழியின் காதலன் எனக் கூறப்படும் நபரே சிறுமியை பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் 12,000 ரூபாவை முற்பணமாக குறித்த நபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சோதனையிட விசாரணையாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இறந்த சிறுமிக்கு தான் விற்கப்பட்டது தெரியுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

மேலும், சிறுமி மேல் மாடியில் இருந்து கீழே விழுவதற்கு முன்னர் சிறுமிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பிரதான சந்தேகநபர் கூறியுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று களுத்துறை நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய முன்னிலையில் நீதிமன்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு ட்டத்தரணிகளுக்கும், இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பவம் இடம்பெற்ற விடுதியின் உரிமையாளரின் மனைவி 02 இலட்சம் ரூபா பிணையில் நேற்று 15 விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தோழி, காதலன் மற்றும் சாரதி ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி இறக்கும் போது சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பிரதான சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

செப்டம்பர் 7 வரை அதிக வெப்பநிலை

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க