சூடான செய்திகள் 1

களுத்துறை – தொட்டுபல சந்தியில் துப்பாக்கிச்சூடு

(UTV|KALUTARA)-களுத்துறை – தொட்டுபல சந்தியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்