உள்நாடு

களுத்துறையில் 15 மணித்தியால நீர்வெட்டு !

(UTV | கொழும்பு) –  களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அளுத்கம, மத்துகம, அகலவத்தை, வார்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தொட்டை, பயாகல, பொம்புவல, மக்கொன, தர்காநகர் மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

நோயிலிருந்து மேலும் 344 பேர் மீண்டனர்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு