வகைப்படுத்தப்படாத

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – வெலிபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர், கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிபன்ன காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Related posts

Alek Sigley: North Korea releases detained Australian student

கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை

ප්‍රහාරයෙන් පසු කටුවපිටිය දේවස්ථානයේ පළමු දේවමෙහෙය