சூடான செய்திகள் 1

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)

(UTV|COLOMBO)-தும்பர பள்ளத்தாக்கை வளமாக்கும் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்திசெய்யும் வைபவம் இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேலும், மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் காரணமாக நீரில் மூழ்கும் லக்கல நகருக்குப்பதிலாக நிர்மாணிக்கப்பட்ட லக்கல புதிய பசுமை நகரத்தை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் வைபவமும் இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளைக் கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின் எழுச்சி என்ற செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய லக்கல நகரை அமைப்பதற்காக 450 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், 26 அரச நிறுவனங்களுக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

லக்கல புதிய வைத்தியசாலையையும் இரண்டாம் நிலைபாடசாலையையும் ஜனாதிபதி இன்று திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிஆட்சி, நிலைபேறானயுகம், பொருளாதார, கலாசார மறுமலர்ச்சி என்ற ஐந்தாண்டு திட்டத்திற்கு அமைய இந்த அதுதொடர்பான வைபவங்கள் ஏற்பாடு செய்யட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்