சூடான செய்திகள் 1

களனி வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பெலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலம் வரை உள்ள பகுதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.

புதிய களனி பால நிர்மாணப் பணிகளுக்காகவே இந்தப் பகுதி மூடப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் புத்தளம் பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பெலியகொட நுழைவாயில் ஊடாக கொழும்பிற்குள் நுழைவது நேற்று நள்ளிரவு முதல் அனுமதிக்கப்பட மாட்டாது.

அதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி, புத்தளம் நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் களனி பாலத்தின் ஊடாக அனுமதிக்கப்பட மாட்டாது.

ஆனால், இந்த போக்குவரத்து ஏற்பாடு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயணத்தை எவ்விதத்திலு;ம பாதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

காலநிலையில் மாற்றம்

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுப்பு