வகைப்படுத்தப்படாத

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

(UDHAYAM, COLOMBO) – களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று நண்பகல் 12.00 மணியுடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“அவள் முழு குடும்பத்தையும் நேசிக்கின்றாள்” – அண்மையில் நடைபெற்ற ஆலோசனை நிகழ்ச்சி

Ireland bowled out for 38 as England surge to victory

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய கட்சித்தலைவர்…