உள்நாடு

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைகழக 9 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

22, 23 மற்றும் 25 வயதுகளை உடைய 9 மாணவர்கள் கிரிபத்கொட பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை மஹர நீதவான் நீதி மன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Related posts

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பாரபட்சமின்றி நடந்து கொள்வார் – சஜித் பிரேமதாச நம்பிக்கை

editor

நாட்டில் இதுவரை 1,988 பேர் பூரண குணம்

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது