விளையாட்டு

களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

(UTV|COLOMBO)-மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகினார்.

இதனையடுத்து, அவர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

​இன்று ஆரம்பமாகிய மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 144 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று