வகைப்படுத்தப்படாத

கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள தடை இல்லை

(UTV|COLOMBO)-நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல், மண்  ஆகியவற்றிற்கான அனுமதி பத்திரத்தை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முறை விரைவில் செயற்பாட்டுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி, உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிர்மாணத்துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் நடைமுறை நிலமைகள் குறித்து நேற்று(29) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கல், மணல் மற்றும் மண் என்பவற்றை பெற்றுக்கொள்ளும் போது மோசடி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள எந்த தடைகளையும் விதிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Prisons Dept. not informed on executions

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

ஆரம்ப பாடசாலை கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு