உள்நாடு

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –     அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து நீதிமன்றம் அவரை இன்று விடுவித்திருந்தது. அதன் படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுடன் கல்வெவ சிறிதம்ம தேரரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர் கிட்டத்தட்ட 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் ஜூலை மாதம் கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

சீன மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரினி

editor

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை