உள்நாடு

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவான் திருமதி டி. என். எல். மஹவத்த இன்று உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பிணை நிபந்தனைகள் பூர்த்தியானதன் பின்னர் அவர் விடுவிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரான சிறிதம்ம தேரரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் மற்றுமொரு சந்தேகநபராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பெயரிடப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இந்த முறைப்பாடு எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் – சஜித்

editor

ஜனாதிபதியின் இரங்கல் செய்தி!

சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்