உள்நாடு

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு 10 ஆம் தரத்திற்கு மேல் உள்ள தரங்களுக்காக மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்திருந்தார்.

இதேநேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அனைத்து பாடசாலைகளிலும் கிருமிநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆழ ஊடுருவி அனைத்தினையும் உடனுக்குடன் அறிந்திட

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி