உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு குறித்த 04 நாட்கள் அவகாசம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரிகள் பூர்த்தி செய்ய முடியும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்