கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை எனவும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தவே பொலிஸார் தலையிட்டுள்ளனர் எனவும் பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.