உள்நாடு

கல்வி அமைச்சின் ஆலோசனைகளில் திருத்தங்கள்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் கல்விச் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த வரையறையில் தளர்வை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக சுகாதார சிபாரிசுக்கு அமைய பாடசாலைகளை முன்னெடுக்க முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை அழைப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று பரவும் நிலை தொடர்பிலும் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு