அரசியல்உள்நாடு

கல்வியையும் சுகாதாரத்தையும் நாட்டின் அடிப்படை உரிமையாக நிறுவி, அரசாட்சியின் ஊடாக அதிக பெருமதியை பெற்றுக் கொடுப்போம் – சஜித்

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுகின்ற செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்போம்.

கொள்கைகளை வகுத்தல், மற்றும் செயற்படுத்தல், கண்காணித்தல், குறைகளைக் கண்டறிதல் போன்ற கொள்கை வட்டாரம், சரியான முறையில் செயல்படுகின்றதா? என்கின்ற பிரச்சினை காணப்படுகின்றது.

கொள்கை தயாரிப்பில் தரவுகளையும் சாட்சிகளையும் மையப்படுத்தி, அறிவியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு பதிலாக அவசரமாக முன்னெடுக்கப்படுகின்ற விடயமாக மாறி இருக்கிறது. இந்த முறையில் இருந்து வெளியேறி முன்னேற்றகரமான சமூகமாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதோடு, இலவச சுகாதாரம் என்கின்ற நாமத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலவச சுகாதார சேவை கிடைக்கப் பெற்றதா என்று பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். தற்பொழுது இலவச சுகாதார சேவை காணப்பட்டாலும் அது இலவசமாக வழங்கப்படுகின்றதா என்கின்ற பிரச்சினை உண்டு. சுகாதாரத் துறையில் சிக்கல்கள் காணப்படுகின்றமையால் அவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் சுகாதாரத் துறையில் திறமையானவர்கள் இருப்பதனால் உலக நாடுகளில் அதிக கேள்வி இருக்கின்றது. எனவே சிந்தனையை சிதறவிடாமல் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது குறித்து யோசிக்க வேண்டும். வங்குரோத்தடைந்த நாடொன்றில் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது மிகவும் சிரமமானது. அரசாங்கத்தில் வளங்களும் ஆளுமையும் காணப்படுகின்றன. இவற்றை ஊக்கமாகக் கொண்டு செயற்பட்டு வளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்.

சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றுலா துறையை இணைத்துக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தொழில் முனைவோர்களை மேம்படுத்தி சுகாதார கட்டமைப்பை வளங்களின் ஊடாக விருத்தி செய்து, அவசர நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் அவ்வாறான அவசர நிலை உருவாகியது. 1800 களிலும் சட்டமொன்றின் மூலம் அவ்வாறு செயல்பட்டிருக்கின்றது. அதனால் காலத்திற்கு பொருத்தமான வகையில் அனைத்தும் தயார் செய்யப்பட வேண்டும். மக்களுக்கு பொறுப்புக் கூறுகின்ற பொறுப்பு ஏற்கின்ற சுகாதாரத் துறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

திறமைக்கேற்ற ஊதியம்.

இங்கு தேசிய ஊதிய கொள்கையில் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுவது சிறந்ததாக இருந்தாலும், பல்வேறு தரப்பினரின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொண்டு கொள்கையின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஊழலின் பாலும் மோசடியின் பாலும் செல்கின்ற இடத்தை இல்லாது செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

முறையான அரச நிர்வாகம்

நம்பகத் தன்மையுடன் கூடிய முறையான ஊழலை ஒலிக்கின்ற டிஜிட்டல் முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரச நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை நடைமுறையில் இருக்க வேண்டும். சொல்வதைப் போன்று செயற்பாட்டிலும் காட்ட வேண்டும். எனவே தான் இந்த ஊழல் ஒழிப்பு முறையை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

சுற்றுலாத்துறை அமைச்சரின் வேண்டுகோள்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது