உள்நாடு

கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 4 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, கைதான நால்வரையும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இன்று (12) பிற்பகல் இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் முற்பட்ட வேளையில், அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

மகிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – நபர் ஒருவர் கைது.

தீர்மானத்திற்கு வந்துள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்!