உள்நாடு

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல் !

(UTV | கொழும்பு) –  கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன.

இதன்படி கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகள் இந்த தெரிவின் போது கருத்திற் கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் தரத்தில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து 13 ஆம் தரத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களின் கீழ் என்.வி.கிவ் நான்காம் நிலை தொழிற்பயிற்சி நெறியொன்றை இதனூடாக நிறைவுசெய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கும் நோக்கில் இந்த தொழிற்கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிறுவர் உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வுகள், வாகன இயந்திர தொழில்நுட்பவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இருபது பாடங்கள் இந்தத் தொழிற்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

மேலும், இது தொடர்பான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளின் அதிபருக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு!

ரயில் சேவைகள் வழமைக்கு

தொழில் வாய்ப்பு எண்ணிக்கையை அதிகரித்த கொரியா