வகைப்படுத்தப்படாத

கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்காக பரீட்சைகள் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் வழங்கும் பரீட்சை சான்றிதழ்களுக்கு அப்பால், அந்த சான்றிதழ்களின் பிரதிகளை உரிய நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச மட்டத்தில் உள்ள அங்கீகாரத்தை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது..

இதற்குரிய வேலைத் திட்டத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களமும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் கூட்டாக அமுலாக்கின்றன.

வெளிநாடு செல்வோர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடிகளில் ஈடுபடுவதை தடுத்து, உள்நாட்டு சான்றிதழ்களுக்கு சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரத்தை பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

2019ஆம் ஆண்டு தொடக்கம் ஜி.சி.ஈ உயர்தர பரீட்சையையும், சாதாரணதர பரீட்சையையும் ஒரே காலகட்டத்தில் நடத்துவது பற்றி ஆராய்வதற்காக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கல்விச் சான்றிதழ்கள் பற்றி ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்

சீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு

பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து பாதிப்பா? இல்லையா?