வகைப்படுத்தப்படாத

கல்லடி பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று (26) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில் மின்சார அத்தியட்சகராக கடமையாற்றி வந்த க.உமாரமணன் (33வயது) என்பவருடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போன உமாரமணன் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவரது சடலம் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இன்று அதிகாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Narammala Pradeshiya Sabha Dep. Chairman further remanded

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்

Boris Johnson’s new-look cabinet meets for first time