அரசியல்உள்நாடு

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம் – கல்யாணம் முடிந்ததும் முடியாதாம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த முறை சம்பள கட்டுப்பாட்டு சபைக்கு சென்ற தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் 2,000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வழங்கினால் இதற்கு நாங்கள் உடன்பட மாட்டோம் என கூறி வௌியேறினார்.

அப்படி வௌியே வந்த நபர்கள்தான் இங்கே உள்ளனர். நீங்கள் வாக்குறுதி அளித்துள்ளீர்கள். 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக, கல்யாணத்திற்கு முன்னர்… தற்போது கல்யாணத்திற்கு பின்னர் முடியாது… அதுதான் கல்யாணத்திற்கு பின்னர் ஒன்றும் செய்வதில்லை. என்றார்.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவு

editor

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு