உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இன்று(04) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார்.
இதன் போது ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபீர் பாடசாலையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை தேசிய காங்கிரஸ் தலைவருக்கு தெளிவுபடுத்தினார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் 75 வது ஆண்டினை முன்னிட்டு கல்லூரியின் பிரதான முகப்பில் வரவேற்பு நுழைவாயில்
நிர்மாணிப்பதற்கும், பாடசாலை சுற்று மதில் புனரமைப்பு செய்வதற்கும் முதல் கட்டமாக ஐந்து மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ. ஆஷிக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

Related posts

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் குறித்து வெளியான செய்தி

editor

பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் பேரை இணைக்கத் தீர்மானம்

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி