இம்முறை கல்முனை கல்வி கோட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. 2024 தரம் 5 புலமைப்பரீட்சையில் கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் 197 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய போதும் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளி பெற்று சித்தி அடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்கு அதிகமாக 95.85% மாணவர்கள் புள்ளிகளை பெற்று சித்தியடைந்திள்ளனர்.134 தொடக்கம் 138 இடையிலான புள்ளிகளை 12 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் பாடசாலை அதிபர் AH.அலி அக்பர் அவர்களின் சிறப்பு வழிகாட்டலின் கீழ் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பயிற்சி ஊக்குவிப்பினால் அதிக மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இம்முறை பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 179 புள்ளியை MSM.HAATHIM எனும் மாணவர் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-ஏ.எஸ்.எம் அர்ஹம்