உள்நாடு

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா  உதவுத் தொகை கையளிப்பு. கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா இன்று  கையளிக்கப்பட்டுள்ளது

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் குறித்த  காசோலையினை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள்  பங்கேற்றிருந்தனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே இக்காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகையானது ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்