உள்நாடு

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதி உத்தியோகத்தர்கள் இன்று (17) திங்கட்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 01 மணிவரை 03 மணித்தியால அடையாள வேழல நிறுத்தத்தை மேற்கொண்டனர்.

இன்று (17) காலை 10 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு அங்கதாக காலை 11.30 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை தமது கோரிக்கைகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைத்தமை, பதவி உயர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை, போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

திரையரங்குகளுக்கு பூட்டு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்