சூடான செய்திகள் 1

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இன்று நண்பகல் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியிலிருந்து அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது அதிகளவான பயணிகள் பஸ்ஸில் இருந்ததாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கழிவு கொள்கலன்கள் தொடர்பில் இடைக்கால தடை

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

விபத்தில் ஒருவர் பலி