உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை பழைய தபாலகம் அருகாமையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (05) இரவு 08.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்கரை பள்ளி வீதி, கல்முனைக்குடி 02 ஐச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் விசேட அதிரடிப் படையினரினால் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – மேலும் இருவர் கைது

editor

விடைத்தாள் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்