வகைப்படுத்தப்படாத

கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி 66 பேர்உயிரிழப்பு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது.

தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள்.

1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது.

தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

සංචාරකයන් සඳහා කෘෂි උද්‍යානය හා කෞතුකාගාරයක්

சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்