அரசியல்உள்நாடு

கலாநிதி விவகாரம் – சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில் எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் “கலாநிதி ஹர்ஷன நாணயக்கார” என பதிவிடப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அது திருத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்களை பதிவேற்றியதில் தவறு இருப்பதாக பாராளுமன்ற தலைமைச் செயலகம் கடிதம் அனுப்பியதாகவும் நீதி அமைச்சர் இதன்போது கூறினார்.

எனினும் இது குறித்து தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று UNP இனது சத்தியாக்கிரகப் போராட்டம்

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு