அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கலந்துரையாடல்களில் இருந்து இன்னும் விலகவில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைபட்டுள்ளன.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் தொடங்கின.

அதன்படி, பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், குறித்த கலந்துரையாடல்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கலந்துரையாடல்களில் இருந்து தங்கள் கட்சி இன்னும் விலகவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் சமீபத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் இருந்து விலகிக்கொண்டார்.

தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக இந்த கலந்துரையாடல்களில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு