வகைப்படுத்தப்படாத

கலகெதர மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இன்று திறப்பு

(UDHAYAM, COLOMBO) – கலகெதர புதிய மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்   இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

பொதுமக்களுக்கு நீதியை வழங்கக்கூடிய அலுவல்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதியமைச்சு ஆரம்பித்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

6 கோடி 50 இலட்சம் ரூபா இதற்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்டதாக இந்த மாவட்ட நீதவான் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

Related posts

வேகமாக பரவி வரும் லசா காய்ச்சல்-16 பேர் உயிரிழப்பு

கிண்ணியா பிரதேசத்தில் அடையாளங் காணப்படாத எந்த நோயும் இல்லை – சுகாதார அமைச்சு

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு