உள்நாடு

கல்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்

(UTV|புத்தளம்) – சட்டவிரோதமான முறையில் மஞ்சள் தொகையொன்றை கொண்டுவர முயற்சித்த 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, குறித்த நபர்களிடம் இருந்து 1428 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டிங்கிப் படகொன்றும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!