உள்நாடு

கறுவா, மிளகு, கிராம்பு விலைகளும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.

அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதிகள் ஊடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலையானது தற்போது 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3,400 ரூபாவாகவும், கிராம்பு ஒரு கிலோகிராம் 1,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோப்பி 1,250 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மிளகு, கறுவா, கிராம்பு உள்ளிட்ட பிரதான பயிர்கள் 45,000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் அதிகாரி.