உள்நாடு

கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

(UTV | கொழும்பு) – இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

சீன நிறுவனமொன்று இறக்குமதி செய்யத் தீர்மானித்த சேதன உரத் தொகைக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணமாகும்.

இந்த நிலையில், அண்மையில் குறித்த நிறுவனத்துக்கு இலங்கை 6.9 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது – சஜித்

editor