உலகம்

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்

(UTV | கொழும்பு) –

ஏடிஸ் வகை நுளம்பு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜிகா வைரல் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இந்திய சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், தமிழகத்தில் இந்தநோய் வேகமாகப் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 3,917,653 பேர் பாதிப்பு

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்

editor