உள்நாடு

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –     கொழும்பின் முக்கிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதன் பிரகாரம் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று (17) முதல் வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான கரையோரப் பாதையில் 10 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதைகளில் ஒன்றை மாத்திரம் பயன்படுத்த முடியும் எனவும் கரையோரப் பாதையில் இயங்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

செவிப்புலனற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் கன்னி உரை

editor

அலி சாஹிர் மௌலானாவுக்கு கால அவகாசம் கொடுத்த ரவூப் ஹக்கீம்

editor

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை