கிசு கிசு

கருவுக்கும் மங்களவுக்கும் அதிஷ்டம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் நிலைமை நாளுக்கு நாள் தொடர்ந்தும் இழுக்கடிக்கப்படும் பட்சத்தில் நேற்றைய தினம் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவரை உடனடியாக கொழும்புக்கு அழைத்து, கட்சி மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மங்கள சமரவீரவால் மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்கு வழங்குமாறும் கோரியுள்ளார். எனவே, கரு ஜயசூரிய தற்போது தலைமைப் பதவி தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பின் பின்னணியில் மங்கள சமரவீரவே செயற்படுகின்றார் எனவும் அரசியல் பின்னணிகள் தெரிவிக்கின்றன.

கரு ஜயசூரியவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு தலைமைப் பதவி வழங்கப்படும் பட்சத்தில் பொதுச் செயலாளர் பதவி மங்களவுக்கு வழங்கப்படலாம் எனவும், இது தொடர்பான கோரிக்கையை அவர் ஏற்கனவே முன்வைத்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றது.

Related posts

காதலர் தினத்தையொட்டி ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி

மைத்திரி – சந்திரிகா மோதல் உக்கிரம்

இலங்கை T-20 தலைமைக்கு தசுன் ஷானக