வகைப்படுத்தப்படாத

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் நிராகரிப்பு

(UTV|ARGENTINA)-சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கும், மருத்துவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் அர்ஜெண்டினாவில் அமுலில் இருந்து வருகிறது. கருக்கலைப்பின் போது பெண்களின் உயிர் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், தங்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரம் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களாகவே அர்ஜெண்டினாவில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போராட்டம் வலுத்ததன் காரணமாக கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம்  பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமூலத்தில் ,14 வார கருவை கலைக்க சட்டபூர்வ அனுமதி உண்டு என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் விழுந்தது. இதனால், சட்டமூலம்  தோல்வியடைந்தது.
உடல்நலம் மிகவும் குன்றிய பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு மட்டுமே அர்ஜெண்டினாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Cabinet papers to review Madrasas & MMDA

இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்

Parliament to debate no-confidence motion against Govt. today